இந்திய எல்லைக்குள் வந்த சீன ராணுவ வீரர் திரும்ப ஒப்படைப்பு

0 1590
லடாக்கின் பாங்கோங் ஏரிக்கரையில் இந்திய ராணுவத்தினரால் பிடிக்கப்பட்ட சீன ராணுவ வீரர் இன்று பத்திரமாக திருப்பி அனுப்பப்பட்டார்.

லடாக்கின் பாங்கோங் ஏரிக்கரையில் இந்திய ராணுவத்தினரால் பிடிக்கப்பட்ட சீன ராணுவ வீரர் இன்று பத்திரமாக திருப்பி அனுப்பப்பட்டார்.

கடந்த 8 ஆம் தேதி இந்திய எல்லைக்குள்  பாங்கோங் ஏரியின் தெற்கு கரைப்பகுதியில் கைது செய்யப்பட்ட அவரை திரும்ப ஒப்படைக்குமாறு கடந்த சனிக்கிழமை சீன ராணுவ அதிகாரிகள் கேட்டுக் கொண்டனர்.

அதைத் தொடர்ந்து இன்று எல்லைப்பகுதியான சூசுல்-மால்டோவில் அவர் சீன ராணுவத்திடம் பத்திரமாக ஒப்படைக்கப்பட்டார். கடந்த மே மாதம் எல்லைப் பிரச்சனை வெடித்த பிறகு சீன ராணுவ வீரர் இந்திய எல்லைக்குள் நுழைந்தது இது இரண்டாவது தடவையாகும். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments