பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கோயம்பேடு சந்தையில் விறுவிறுப்பாக நடைபெறும் விற்பனை

0 991
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, சென்னை கோயம்பேடு சந்தையில் கரும்பு, மஞ்சள் குலை விற்பனை விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, சென்னை கோயம்பேடு சந்தையில் கரும்பு, மஞ்சள் குலை விற்பனை விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

கடந்த ஆண்டைவிட, தற்போது கரும்பின் வரத்து குறைந்துள்ளதால் 20 கரும்புகள் கொண்ட பண்ருட்டி கரும்பு ஒரு கட்டு 350 ரூபாய்க்கும், மதுரை மேலூர் கரும்பு ஒரு கட்டு 450 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

இதேபோல், மஞ்சள் குலை ஒரு கட்டு 100 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது. பொதுவாக பொங்கலுக்கு இருதினங்கள் முன் 500 லாரிகளில் கரும்பு வரும் நிலையில், இன்று 150 லாரிகள் மட்டுமே வந்துள்ளதால் வரத்து குறைந்து விலை அதிகரித்துள்ளது என வியாபாரிகள் கூறுகின்றனர். மேலும் நாளை வரத்து அதிகரிக்கும் பச்சத்தில் விலை குறைய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments