ராமதாசுடன் அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி சந்திப்பு.. தொகுதி பங்கீடு குறித்து ஆலோசனை என தகவல்

0 28223
பா.ம.க. நிறுவனர் ராமதாஸை சந்தித்து அதிமுக அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி ஆகிய இருவரும் தைலாபுரம் தோட்டத்தில் ஆலோசனை.

பா.ம.க. நிறுவனர் ராமதாசை அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி ஆகியோர் சந்தித்து பேசினர்.

விழுப்புரம் மாவட்டம் தைலாபுரத்தில் உள்ள பா.ம.க. நிறுவனர் ராமதாசின் இல்லத்தில் இந்த சந்திப்பு நடைபெற்றது.

சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக நடந்த இந்த ஆலோசனையில், வன்னியர்களுக்கான 20 சதவீத இட ஒதுக்கீடு, சட்டமன்ற தேர்தலுக்கான தொகுதி பங்கீடு உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments