தேவையில்லாமல் ரஜினி விஷயத்தை கிளற வேண்டாம் - கமல்ஹாசன்

0 7615
ரஜினிகாந்தின் ஆரோக்கியம் தான் தனக்கு முக்கியம் என்றும்,தேவையில்லாமல் ரஜினி விஷயத்தை கிளற வேண்டாம் எனவும் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் வலியுறுத்தியுள்ளார்.

ரஜினிகாந்தின் ஆரோக்கியம் தான் தனக்கு முக்கியம் என்றும், தேவையில்லாமல் ரஜினி விஷயத்தை கிளற வேண்டாம் எனவும் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் வலியுறுத்தியுள்ளார்.

கோவையில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வரும் கமல்ஹாசன், தனியார் ஹோட்டலில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், மநீம.திற்கு மனுநீதி அறக்கட்டளை ஆதரவு அளித்துள்ளது மகிழ்ச்சியளிக்கிறது எனத் தெரிவித்தார்.

நடிகர் ரஜினிகாந்தின் அறிக்கை குறித்த கேள்விக்கு, அது அவரது அறிக்கை எனவும், அதற்கு நான் பதில் சொல்ல முடியாது எனவும் பதிலளித்தார். மேலும் நடிகர் ரஜினிகாந்த் எனக்கு நல்ல நண்பர் எனவும், அவரது ஆரோக்கியம் தான் முக்கியம் எனவும் கூறிய அவர், ரஜினிகாந்த் சொன்ன விஷயங்களில் இருந்து சும்மா கிளறிக் கொண்டிருக்க வேண்டாம் எனக் கேட்டுக் கொண்டார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments