பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதான 3 பேரை, 2 நாள் சிபிஐ காவலில் விசாரிக்க அனுமதி

0 2084
பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதான 3 பேரை, 2 நாள் சிபிஐ காவலில் விசாரிக்க அனுமதி

பொள்ளாச்சி பாலியல் வழக்கில் அண்மையில் கைதான 3 பேரில், ஒருவனை மட்டும் 2 நாட்களுக்கு காவலில் எடுத்து விசாரிக்க சிபிஐ-க்கு கோவை மாவட்ட மகளிர் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

இந்த வழக்கில் ஏற்கனவே 5 பேர் கைது செயப்பட்டு சேலம் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில், 2 ஆண்டுகளுக்கு பின் திடீர் திருப்பமாக  பொள்ளாச்சியை சேர்ந்த அருளானந்தம், பாபு, ஹேரன்பால் ஆகிய மூவரும் சமீபத்தில் கைது செய்யப்பட்டனர்.

அவர்களை 5 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி கோவை மாவட்ட நீதிமன்றத்தில் சிபிஐ மனுதாக்கல் செய்திருந்தது. இதனை விசாரித்த நீதிபதி, ஹேரன்பால் என்பவனை மட்டும் 2 நாட்களுக்கு காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி வழங்கியுள்ளார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments