மின்சார கார் தயாரிப்பு தொடர்பாக ஹூன்டாய் நிறுவனத்துடன் ஆப்பிள் நிறுவனம் ஒப்பந்தம்..?

0 2585
மின்சார கார் தயாரிப்பு தொடர்பாக தென்கொரியாவின் ஹூன்டாய் நிறுவனத்துடன் ஆப்பிள் நிறுவனம் மார்ச் மாதம் ஒப்பந்தம் செய்ய இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மின்சார கார் தயாரிப்பு தொடர்பாக தென்கொரியாவின் ஹூன்டாய் நிறுவனத்துடன் ஆப்பிள் நிறுவனம் மார்ச் மாதம் ஒப்பந்தம் செய்ய இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கொரியா ஐ.டி.நியூஸ் (Korea IT news) என்ற செய்தித்தாள் வெளியிட்டுள்ள செய்தியில், 2024ம் ஆண்டுக்குள் 2 நிறுவனங்களும் கார் தயாரிப்பை அமெரிக்காவில் தொடங்க இலக்கு நிர்ணயித்திருப்பதாக கூறப்பட்டுள்ளது.

முன்னதாக ஆப்பிள் நிறுவனத்துடன் பேச்சு நடத்தி வருதாக ஹூன்டாய் கடந்த வெள்ளிக்கிழமை தெரிவித்திருந்தது. அதை உறுதிப்படுத்தும் வகையில் தென்கொரியா செய்தித்தாள் தற்போது செய்தி வெளியிட்டுள்ளது. ஆனால் ஆப்பிள் தரப்பில் எதுவும் குறிப்பிடப்படவில்லை.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments