திமுக தொண்டர்களுக்கு மு.க.ஸ்டாலின் பொங்கல் வாழ்த்து

பொங்கல் திருநாளை முன்னிட்டு, திமுக தொண்டர்களுக்கு அக்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
பொங்கல் திருநாளை முன்னிட்டு, திமுக தொண்டர்களுக்கு அக்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் எழுதியுள்ள கடிதத்தில், 13-ம் தேதி திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியிலும், 14-ம் தேதி ஆவடியிலும் நடைபெறும் சமத்துவ பொங்கல் விழாவில் தாமும் கலந்து கொள்ள இருப்பதாக மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.
தை பிறந்தால் வழி பிறக்கும் என்பதை வழக்கமாகக் கொண்டிருக்கும் மக்களுக்கு நம்பிக்கையும் மகிழ்ச்சியும் அளிக்கும் வகையில் சமத்துவப் பொங்கல் சிறக்கட்டும் என்றும், மக்களின் இதயங்களில் மகிழ்ச்சி பொங்கட்டும் என்றும் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
Comments