அரசியலுக்கு வரமாட்டேன் - ரஜினிகாந்த் திட்டவட்டம்..!

அரசியலுக்கு வர மாட்டேன் என்று ரஜினிகாந்த் திட்டவட்டமாக அறிவித்துள்ளார்.
கட்சி தொடங்க போவதில்லை என்று ரஜினி அறிவித்த நிலையில், அதை ஏற்காமல் அவருடைய ரசிகர்கள் போராட்டம் நடத்தியபடி உள்ளனர்.
இந்நிலையில் டுவிட்டரில் ரஜினிகாந்த் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், அரசியலுக்கு வருவதில்லை என்ற முடிவை மறுபரிசீலனை செய்யக்கோரி சிலர், ரஜினி மக்கள் மன்ற பதவி பொறுப்பிலிருந்தும், மன்றத்திலிருந்தும் நீக்கப்பட்ட பலருடன் சேர்ந்து சென்னையில் ஒரு நிகழ்ச்சியை நடத்தியிருப்பதாகவும், தலைமையின் உத்தரவை மீறி நிகழ்ச்சியை நடத்தியிருப்பது வேதனையளிக்கிறது என்றும் கூறியுள்ளார்.
தாம் ஏன் இப்போது அரசியலுக்கு வரமுடியவில்லை என்பதற்கான காரணங்களை ஏற்கெனவே விரிவாக விளக்கியுள்ளதாகவும், தமது முடிவை கூறி விட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
தயவுகூர்ந்து இதற்கு பிறகும், தாம் அரசியலுக்கு வர வேண்டுமென்று இதுபோன்ற நிகழ்ச்சிகளை நடத்தி மேலும் மேலும் வேதனைக்கு உள்ளாக்க வேண்டாம் எனவும் கேட்டு கொண்டுள்ளார்.
Comments