இலங்கை யாழ் பல்கலைகழகத்தில் மீண்டும் முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி... மாணவர்களின் போராட்டத்தை அடுத்து, துணைவேந்தர் அடிக்கல் நாட்டினார்

0 1331

இலங்கை யாழ்ப்பாணம் பல்கலைகழகத்தில் மீண்டும் முள்ளிவாய்க்கால் நினைவு தூபி அமைப்பதற்கு அடிக்கல் நாட்டப்பட்டது.

இந்த பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் நினைவு தூபி, கடந்த 8ம் தேதி நள்ளிரவில் தகர்க்கப்பட்டது. இதனைக் கண்டித்து இலங்கையில் தமிழர்களால் தொடர்ச்சியாக போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

உலகம் முழுவதும் வாழும் தமிழர்களும் இந்த சம்பவத்திற்கு தங்கள் கண்டனங்களை பதிவு செய்திருந்தனர்‍. கடும் எதிர்ப்பு எழுந்ததையடுத்து தகர்க்கப்பட்ட இடத்தில் மீண்டும் முள்ளிவாய்க்கால் நினைவு தூபி அமைக்க முடிவு செய்யப்பட்டது.

பல்கலைகழக துணைவேந்தர் சற்குணராஜா இன்று அதற்கான அடிக்கல் நாட்டினார்‍. மும்மத முறைப்படி இந்த அடிக்கல்நாட்டு விழா நடைபெற்றது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments