ஜல்லிக்கட்டு காளைகளுக்கு டோக்கன் பெற குறுகிய இடத்தில் ஏராளமானோர் திரண்டதால் தள்ளுமுள்ளு

அவனியாபுரம் ஜல்லிக்கட்டு காளைகளின் உரிமையாளர்கள் மற்றும் உதவியாளர்கள் கொரோனா பரிசோதனைக்காக குறுகிய இடத்தில் திரண்டதால் தள்ளுமுள்ளு உருவானது.
அவனியாபுரம் ஜல்லிக்கட்டு காளைகளின் உரிமையாளர்கள் மற்றும் உதவியாளர்கள் கொரோனா பரிசோதனைக்காக குறுகிய இடத்தில் திரண்டதால் தள்ளுமுள்ளு உருவானது.
மதுரை அவனியாபுரத்தில் பொங்கல் திருநாளான ஜனவரி 14ஆம் தேதி ஜல்லிக்கட்டு நடைபெற உள்ளது. இதில் களம் காணும் காளைகளுக்கு டோக்கன் வழங்குதல் மற்றும் உரிமையாளர்கள் மற்றும் உதவியாளர்களுக்கு கொரோனா பரிசோதனை, அவனியாபுரம் தனியார் பள்ளியில் நடத்தப்பட்டது.
650 காளைகளுக்கு மட்டுமே அனுமதி என்ற நிலையில், அதிகாலை முதலே ஆயிரம் பேர் வரை திரண்டதால், நான் முந்தி...நீ முந்தி என போட்டி உருவானது. தடுப்புகளுக்குள் வரிசையில் முண்டியடித்துக் கொண்டு நின்றவர்கள், வாடிவாசல் வழியாக பாயும் காளைகளை போல விரைந்ததால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
பின்னர் அவர்களை வரிசையில் வருமாறு லத்தியைக் காட்டி போலீசார் ஒழுங்குபடுத்தினர்.
Comments