டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்கின் பெண் தோழிக்கு கொரோனா என தகவல்

டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்கின் பெண் தோழிக்கு கொரோனா என தகவல்
உலகின் நம்பர் ஒன் கோடீசுவரரும், டெஸ்லா மற்றும் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனங்களின் அதிபருமான எலான் மஸ்கின் பெண் தோழிக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
கனடாவை சேர்ந்த 32 வயதான பாடகி கிரிம்ஸ் கடந்த 2018முதல் எலான் மஸ்கின் தோழியாக இருக்கிறார். எலான் மஸ்க் மூலம் அவருக்கு கடந்த மே மாதம் குழந்தையும் பிறந்துள்ளது.
தமக்கு கொரோனா வந்துள்ளதை இன்ஸ்டாகிராமில் தெரிவித்துள்ள கிரிம்ஸ், எலான் மஸ்கிற்கோ, அல்லது தனது குழந்தைக்கோ தொற்று ஏற்பட்டதா என்பது குறித்து எதுவும் தெரிவிக்கவில்லை.
Comments