தமிழகத்தில் இருந்து இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.3.50 கோடி மதிப்புள்ள சமையல் மஞ்சள் பறிமுதல்

0 1573
தமிழகத்தில் இருந்து இலங்கைக்கு கடத்த முயன்ற சுமார் மூன்றரை கோடி ரூபாய் மதிப்புள்ள சமையல் மஞ்சளை பறிமுதல் செய்த இலங்கை கடற்படையினர், தூத்துக்குடியை சேர்ந்த 12 பேரை கைது செய்தனர்.

தமிழகத்தில் இருந்து இலங்கைக்கு கடத்த முயன்ற சுமார் மூன்றரை கோடி ரூபாய் மதிப்புள்ள சமையல் மஞ்சளை பறிமுதல் செய்த இலங்கை கடற்படையினர், தூத்துக்குடியை சேர்ந்த 12 பேரை கைது செய்தனர்.

பெரிய அளவில் சமையல் மஞ்சள் கடத்தப்பட இருப்பதாக வந்த தகவலை அடுத்து கல்பிட்டி வடகிழக்கு கடற்கரை பகுதியில் உள்ள தீவு ஒன்றில் இலங்கை கடற்படையினர் மறைந்திருந்தனர்.

அப்போது அங்கு நுழைந்த 2 நாட்டுப்படகுகளை சுற்றி வளைத்த இலங்கை கடற்படையினர் அதில் கடத்தி வரப்பட்ட 8 ஆயிரத்து 779 கிலோ சமையல் மஞ்சளை பறிமுதல் செய்ததோடு, தூத்துக்குடி திரேஸ்புரத்தை சேர்ந்த 12 பேரை கைது செய்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments