இந்தோனேஷியாவில் கனமழையால் நிலச்சரிவு: 11 பேர் உயிரிழப்பு; 18 பேர் காயம்

0 620
இந்தோனேஷியாவில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 11 பேர் உயிரிழந்தனர்.

இந்தோனேஷியாவில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 11 பேர் உயிரிழந்தனர்.

மேற்கு ஜாவாவில் உள்ள சியான்ஜூவாங் என்ற இடத்தில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்தது. இதன் காரணமாக மலைப்பகுதியில் மண்ணின் தன்மையில் நெகிழ்வு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து நேற்று மாலை திடீரென நிலச்சரிவு ஏற்பட்டது.

இதில் ஏராளமானோர் சிக்கினர். இதையடுத்து தேசிய பேரிடர் மீட்புப் படையினர் மீட்புப் பணியில் ஈடுபட்டனர். இந்த நிலச்சரிவில் சிக்கி 11 பேர் உயிரிழந்த நிலையில், 18 பேர் காயமடைந்தனர். தொடர்ந்து பெய்யும் மழையால் மீட்புப் பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments