இந்தோனேசிய விமான விபத்து: 2 கருப்புப் பெட்டிகள், எஞ்சின் உள்ளிட்ட உதிரி பாகங்கள் மீட்பு

0 1309
இந்தோனேசிய விமான விபத்து: 2 கருப்புப் பெட்டிகள், எஞ்சின் உள்ளிட்ட உதிரி பாகங்கள் மீட்பு

கடலில் விழுந்து நொறுங்கிய இந்தோனேசிய விமானத்தின் எஞ்சின் கருப்புப் பெட்டி உள்ளிட்ட உதிரி பாகங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

போயிங் 737 என்ற விமானம் 62 பயணிகளுடன் இந்தோனேசியாவில் இருந்து புறப்பட்ட 4  நிமிடங்களிலேயே ராடார் திரையைவிட்டு மாயமாக மறைந்து விட்டது. அந்த விமானம் விபத்துக்குள்ளாகி கடலில் விழுந்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டது.

அதில் இருந்த பயணிகள் அனைவரும் உயிரிழந்துவிட்டனர். கடலில் விழுந்த விமானத்தைத் தேட கடற்படை கப்பல்கள் அனுப்பி வைக்கப்பட்டன. இந்நிலையில் விமானத்தின் கடைசி நிமிடங்களைப் பதிவு செய்த இரண்டு கருப்புப் பெட்டிகளும் அதனைத் தொடர்ந்து எஞ்சினும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

உடல்களையும், எஞ்சிய பாகங்களையும் மீட்க கப்பல்கள், ஹெலிகாப்டர்கள் மூலம் ஜாவா கடல்பகுதியில் தீவிரமான தேடுதல் வேட்டை முடுக்கி விடப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments