கொரோனாவால் மாணவர்கள் இடைநிற்றலை தவிர்க்க, மாநில அரசுகளுக்கு மத்திய கல்வித்துறை அமைச்சகம் உத்தரவு

0 2918
கொரோனா தாக்கம் காரணமாக பள்ளிக்குச் செல்லாத மாணவர்களை கண்டறிந்து, அவர்களை மீண்டும் பள்ளிக்கு அனுப்பி வைக்கும் முயற்சியில் ஈடுபடுமாறு மாநில அரசுகளை மத்திய கல்வித்துறை அமைச்சகம் அறுவுறுத்தியுள்ளது.

கொரோனா தாக்கம் காரணமாக பள்ளிக்குச் செல்லாத மாணவர்களை கண்டறிந்து, அவர்களை மீண்டும் பள்ளிக்கு அனுப்பி வைக்கும் முயற்சியில் ஈடுபடுமாறு மாநில அரசுகளை மத்திய கல்வித்துறை அமைச்சகம் அறுவுறுத்தியுள்ளது.

இதுகுறித்து பேசிய கல்வி அமைச்சக அதிகாரிகள், கொரோனாவால் பள்ளிகள் மூடப்பட்டதால், மாணவர்களின் இடைநிற்றலை தவிர்க்கவும், நடப்பாண்டில் பள்ளிப்படிப்பை பாதியில் கைவிட்ட மாணவர்களின் எண்ணிக்கையை குறைப்பதற்கான முயற்சிகளையும் மாநில அரசுகள் மேற்கொள்ள வேண்டும் என்று தெரிவித்தனர்.

பள்ளிகளில் குறைந்தளவிலான மாணவர் சேர்க்கை, கற்றல் இழப்பு மற்றும் சேர்க்கை மோசமடைவதைத் தடுப்பதற்கான சரியான செயல் திட்டத்தை ஏற்படுத்த மாநில அரசுகளை வலியுறுத்தினர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments