டெல்லியில் நடைபெறும் குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தினராக சூரிநாம் நாட்டு அதிபர் பங்கேற்பார் என தகவல்

0 946
டெல்லியில் நடைபெறும் குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தினராக சூரிநாம் நாட்டு அதிபர் பங்கேற்பார் என தகவல்

வரும் 26ந் தேதியன்று குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தினராக சூரிநாம் நாட்டு அதிபர் பங்கேற்பார் என தகவல்கள் வெளியாகி உள்ளது.

முன்னதாக இந்த ஆண்டு நடைபெறும் குடியரசு தின விழாவின் போது, சிறப்பு விருந்தினராக இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் கலந்து கொள்வதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் இங்கிலாந்தில் உருமாறிய கொரோனா வைரஸ் அதிகம் பரவி வருவதால் அவரது வெளிநாட்டு பயணம் ரத்து செய்யப்பட்டது.

இதனை அடுத்து குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்க தென் அமெரிக்க நாடான சூரிநாமின் அதிபரும், இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவருமான சந்திரிகாபிரசாத் சந்தோகியை,அழைக்க முடிவு செய்துள்ளதாக, பிரதமர் அலுவலக வட்டாரங்கள் தெரிவித்தன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments