சிட்னி டெஸ்ட் : வெற்றிக் கோட்டை மெல்ல மெல்ல நெருங்கும் இந்தியா

0 10646
சிட்னி டெஸ்ட் : வெற்றிக் கோட்டை மெல்ல மெல்ல நெருங்கும் இந்தியா

ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் நடைபெற்று வரும் 3வது டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்தியா வெற்றி பெற இன்னும் 211 ரன்கள் எடுக்க  வேண்டியுள்ளது.

சிட்னியில் இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் இடையேயான 3வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி தற்போது நடைபெற்று வருகிறது. டாஸ் வென்று முதலில் ஆடிய ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில் 338 ரன்களும் இந்திய அணி 244 ரன்களும் எடுத்தன.

பின்னர் 2வது இன்னிங்சை ஆடிய ஆஸ்திரேலிய அணி 6 விக்கெட் இழப்பிற்கு 312 ரன்கள் எடுத்து ஆட்டத்தை டிக்ளேர் செய்வதாக அறிவித்த து. இதனை அடுத்து 407 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் இந்தியா தனது 2வது இன்னிங்சை ஆடத் தொடங்கியது.

இறுதி நாளான இன்று ரோகித் சர்மா 52 ரன்களும், சுப்மான் கில் 31 ரன்களும், ரஹானே 4 ரன்களிலும் ஆட்டம் இழந்தனர். புஜாரா 32 ரன்களுடனும், ரிஷப் பந்த் 72 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். சற்று முன்வரை இந்திய அணி 3 விக்கெட் இழப்பிற்கு 196 ரன்கள் எடுத்திருந்தது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments