பறவைக்காய்ச்சல் பாதித்த மாநிலங்களில் மத்தியக் குழுவினர் ஆய்வு நடத்த திட்டம்

0 616
பறவைக்காய்ச்சல் பாதித்த மாநிலங்களில் மத்தியக் குழுவினர் ஆய்வு நடத்த திட்டம்

பறவைக் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 7 மாநிலங்களில் மத்தியக் குழுவினர் ஆய்வு நடத்த உள்ளனர்.

கேரளா, ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், இமாச்சலப் பிரதேசம், ஹரியானா, குஜராத் மற்றும் உத்தரப்பிரதேசம் ஆகிய ஏழு மாநிலங்களில் பறவைக் காய்ச்சல் தற்போது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் டெல்லி மற்றும் மகாராஷ்டிராவிலும் இந்த நோய் பரவியிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. இந்நிலையில் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆய்வு செய்ய மத்தியக் குழுவினர் முடிவு செய்துள்ளனர்.

முன்னதாக பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தவும், பறவை காய்ச்சல் தொடர்பான தவறான தகவல்கள் பரவாமல் இருக்கவும் மத்திய அரசு, மாநில அரசுகளை கேட்டுக் கொண்டுள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments