ஹரியானாவில் முதல்வரைக் கண்டித்து விவசாயிகள் போராட்டம்

ஹரியானாவில் முதல்வரைக் கண்டித்து விவசாயிகள் போராட்டம்
ஹரியானாவில் முதலமைச்சர் பேச இருந்த கூட்டத்தைக் கண்டித்து விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
வேளாண் சட்டங்கள் குறித்து அம்மாநில முதலமைச்சர் மனோகர்லால் கட்டார், கர்னால் நகரில் பேசுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இதற்காக அவர் ஹெலிகாப்டரில் இறங்குவதற்கு தளமும் அமைக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் அங்கு குவிந்த நூற்றுக்கணக்கான விவசாயிகள் முதலமைச்சருக்கு எதிர்ப்புத் தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது அவர்கள் நாற்காலிகள், பதாகைகளை தூக்கி வீசினர். இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் மீது, தடியடி நடத்தியும், தண்ணீர் மற்றும் கண்ணீர் புகையை வீசியும் கூட்டத்தைக் கலைத்தனர்.
விவசாயிகள் போராட்டம் காரணமாக முதலமைச்சரின் நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டது.
Comments