காஷ்மீரில் இருசக்கர வாகனத்தில் மறைத்து வைக்கப்பட்ட வெடிபொருள் கண்டுபிடிப்பு, பெரும் சேதம் தவிர்ப்பு

காஷ்மீரில் இருசக்கர வாகனத்தில் மறைத்து வைக்கப்பட்டிருந்த வெடிபொருள் தகுந்த நேரத்தில் கண்டுபிடிக்கப்பட்டதால் பெரும் சேதம் தவிர்க்கப்பட்டது.
காஷ்மீரில் இருசக்கர வாகனத்தில் மறைத்து வைக்கப்பட்டிருந்த வெடிபொருள் தகுந்த நேரத்தில் கண்டுபிடிக்கப்பட்டதால் பெரும் சேதம் தவிர்க்கப்பட்டது.
பூஞ்ச் மாவட்டத்தில் உள்ள மென்தார் பகுதியில் ராஷ்ட்ரிய ரைஃபிள்ஸ் படையினரும், உள்ளூர் போலீசாரும் இணைந்து ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது கேட்பாரின்றி நிறுத்தப்பட்டிருந்த இருசக்கர வாகனத்தைச் சோதனையிட்ட போது அதனுள் இரண்டரை கிலோ எடையில் பயங்கர வெடிபொருள் மறைத்து வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
பின்னர் அந்த வெடிபொருள் பாதுகாப்பான இடத்திற்கு கொண்டு செல்லப்பட்டு அழிக்கப்பட்டது.
Comments