கொரோனா தடுப்புத் திட்டம் : முதலமைச்சர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை

0 1401

கொரோனா தடுப்பூசி திட்டத்தை செயல்படுத்துவது குறித்து அனைத்து மாநில முதலமைச்சர்களுடனும் பிரதமர் மோடி இன்று காணொலிக் காட்சி மூலம் ஆலோசனை நடத்துகிறார்.

இந்தியாவில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த கோவாக்சின் மற்றும் கோவீஷீல்டு தடுப்பு மருந்து ஆகியவற்றை அவசரகால பயன்பாட்டுக்கு மத்திய அரசு அண்மையில் அனுமதியளித்தது.

இதனையடுத்து, கொரோனா தடுப்பூசி திட்டத்தை நாடு முழுவதும் செயல்படுத்துவது குறித்து 2 கட்டங்களாக ஒத்திகையும் நடத்தப்பட்டது. இதைத் தொடர்ந்து டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற உயர்மட்ட ஆலோசனைக் குழு கூட்டத்தில், கொரோனா தடுப்பூசி போடும் திட்டத்தை 16ம் தேதி தொடங்குவது என்று முடிவெடுத்து அறிவிக்கப்பட்டது.

அதன்படி, கர்நாடக மாநிலத்தில் 2 இடங்களில் உள்ள மருத்துவமனைகளில் தடுப்பூசி போடும் திட்டத்தை காணொலி மூலம் தொடங்கி வைப்பதன் மூலம், நாடு முழுவதும் அத்திட்டத்தை மோடி தொடங்கி வைக்கவுள்ளார். இதைத் தொடர்ந்து பல்வேறு மாநிலங்களிலும் முறைப்படி அத்திட்டம் தொடங்கி வைக்கப்படவுள்ளது.

இதுதொடர்பாக அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேச முதலமைச்சர்களுடன் பிரதமர் மோடி இன்று காணொலி மூலம் ஆலோசனை நடத்தவுள்ளார். அப்போது அவர், தடுப்பூசி போடும் திட்டத்தை செயல்படுத்துவதற்கு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் தயார் நிலை குறித்து ஆய்வு செய்யவுள்ளார். இந்த ஆலோசனையில் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட அனைத்து முதலமைச்சர்களும் பங்கேற்கின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments