தமிழகத்தில் 3 மாவட்டங்களில் இன்று மிக கனமழை பெய்யக்கூடும் - சென்னை வானிலை ஆய்வு மையம்

0 107537
தமிழகத்தில் 3 மாவட்டங்களில் இன்று மிக கனமழை பெய்யக்கூடும் - சென்னை வானிலை ஆய்வு மையம்

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக ராமநாதபுரம், புதுக்கோட்டை, தூத்துக்குடி ஆகிய 3 மாவட்டங்களில் இன்று கனமழை முதல் மிக கனமழை வரையில் பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


இலங்கைக்கும் - குமரி கடல் பகுதிக்கும் இடையே நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, தமிழகத்தில் நாளை கனமழை நீடிக்குமென கூறப்பட்டுள்ளது.

நெல்லை, புதுக்கோட்டை, சிவகங்கை, கடலூர் மற்றும் டெல்டா மாவட்டங்களில் கனமழையும், திருச்சி, மதுரை, விழுப்புரம், அரியலூர், பெரம்பலூர் ஆகிய 5 மாவட்டங்களில் மிதமான மழையும் பெய்யக்கூடும் என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments