இந்தோனேசிய விமான விபத்து: விமானத்தின் கறுப்புப் பெட்டிகள் கண்டுபிடிப்பு

0 4944
இந்தோனேசிய விமான விபத்து: விமானத்தின் கறுப்புப் பெட்டிகள் கண்டுபிடிப்பு

நேற்று காணாமல் போன ஸ்ரீவிஜயா ஏர் விமானம் ஜாவா கடலில் விழுந்து நொறுங்கி விட்டதாக இந்தோனேசிய அதிபர் ஜோகோ விடோடோ அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.

சனிக்கிழமை பிற்பகல் தலைநகர் ஜகார்த்தோவில் இருந்து 62 பேருடன் பறந்து உயர்ந்த இந்த விமானம் 4 நிமிடங்களில் ரேடார் தொடர்பை இழந்தது. இந்த நிலையில் ஜாவா கடலில் மீட்புப் பணியில் ஈடுபட்ட வீரர்கள் விமானத்தின் உடைந்த பாகங்களையும், பயணிகளின் உடல்பாகங்களையும் கண்டுபிடித்தனர்.

நொறுங்கிய விமானத்தின் 2 கறுப்புப் பெட்டிகளையும் அவர்கள் கைப்பற்றி உள்ளனர்.  அதில் இருந்து கிடைக்கும் தகவல்களின் அடிப்படையில் விமான விபத்து குறித்த கூடுதல் விவரங்கள் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments