மும்பை ஜூகு கடற்பகுதியில் உள்ள இடத்தில் சட்டவிரோதமாக கட்டிடங்கள் கட்டியதாக மும்பை மாநகராட்சி நோட்டீஸை எதிர்த்து சோனு சூட் உயர்நீதிமன்றத்தில் மனு

0 1118
மும்பை ஜூகு கடற்பகுதியில் உள்ள இடத்தில் சட்டவிரோதமாக கட்டிடங்கள் கட்டியதாக மும்பை மாநகராட்சி நோட்டீஸை எதிர்த்து சோனு சூட் உயர்நீதிமன்றத்தில் மனு

ஜூகுவில் உள்ள தனக்கு சொந்தமான இடத்தில் சட்டவிரோதமாக கட்டிடம் கட்டியுள்ளதாக குற்றம்சாட்டி மும்பை மாநகராட்சி அனுப்பிய நோட்டீசுக்கு எதிர்ப்பு தெரிவித்து மும்பை உயர்நீதிமன்றத்தில் இந்தி நடிகர் சோனு சூட் மனு தாக்கல் செய்துள்ளார். 

கொரோனா ஊரடங்கு காலத்தில் தேடித் தேடி பலருக்கு உதவி செய்ததால் அவருக்கு பல தரப்பினரும் பாராட்டு தெரிவித்தனர். 

இந்நிலையில் மும்பை ஜூகு கடற்கரை பகுதியில், அவருக்கு சொந்தமான இடத்தில் சட்டவிரோதமாக கட்டிடங்கள் கட்டப்பட்டு இருப்பதாக குற்றம்சாட்டி, அவருக்கு மாநகராட்சி நோட்டீஸ் அனுப்பியிருந்தது.

இதை எதிர்த்து சோனு மனு தாக்கல் செய்துள்ளார். அந்த மனு மீது உயர்நீதிமன்றத்தில் நாளை விசாரணைக்கு வரவுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments