பொங்கல் பண்டிகை : புத்தாடை வாங்க சென்னை தியாகராய நகரில் குவிந்த பொதுமக்கள்

0 7361
பொங்கல் பண்டிகை : புத்தாடை வாங்க சென்னை தியாகராய நகரில் குவிந்த பொதுமக்கள்

பொங்கலுக்கு இன்னும் சில தினங்களே உள்ள நிலையில், சென்னை தியாகராய நகர் துணிக் கடைகளில் கடைசி நிமிட விற்பனை, களை கட்டியுள்ளது.

ஆண்களும் பெண்களும் அணி அணியாக குவிந்தனர். இதனால், ரங்கநாதன் தெரு, பாண்டி பஜார் மற்றும் சத்யா பஜார் என முக்கிய பகுதிகளில் எங்கும் மனித தலைகளாக காட்சி அளித்தன.

கொரோனா ஊரடங்கால் கடந்த 9 மாதங்களுக்கும் மேலாக முடங்கி கிடந்த வியாபாரம் பொங்கலுக்கு சூடு பிடித்துள்ளதாக வியாபாரிகள் மகிழ்ச்சி தெரிவித்தனர். துணிக்கடைகளில் சிறுவர் -சிறுமிகள், தங்களுக்கு தேவையான புத்தாடை எடுக்க அதிக ஆர்வம் காட்டினர்.

இதேபோல, இளைஞர்களும், இளம்பெண்களும் பொங்கல் துணி எடுக்க பெருமளவில் குவிந்திருந்தனர். ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாள் என்பதால், தியாகராயநகரில் கூட்டம் அலைமோதியது. இதனால், போலீசாரும் பெருமளவில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments