மக்கள் நீதி மய்யத்திற்கு தேர்தலில் சிறப்பான முடிவு கிடைக்கும் - கமல்ஹாசன்

மக்கள் நீதி மய்யத்திற்கு தேர்தலில் சிறப்பான முடிவு கிடைக்கும் - கமல்ஹாசன்
தமிழகம் வெற்றி நடை போட்டிருந்தால் நாங்கள் அரசியலுக்கு வந்திருக்க மாட்டோம் என மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் கூறியுள்ளார்.
கோவைக்கு தேர்தல் பிரச்சாரத்திற்கு சென்ற அவர், சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, திரையரங்குகள் 50% பார்வையாளர்களை கொண்டு செயல்படும் முடிவு ஆரோக்கியமானது என்றார்.
சட்டமன்ற தேர்தலில் மக்கள் நீதி மய்யத்திற்கு சிறப்பான முடிவு கிடைக்கும் என்றும் கமல்ஹாசன் நம்பிக்கை தெரிவித்தார்.
Comments