கொலம்பியா நாட்டில் பயங்கர தீ விபத்து - ஒரே குடும்பத்தை சேர்ந்த 7 பேர் பலி

0 527
கொலம்பியா நாட்டில் பயங்கர தீ விபத்து - ஒரே குடும்பத்தை சேர்ந்த 7 பேர் பலி

கொலம்பியா நாட்டில் நேரிட்ட பயங்கர தீ விபத்தில் 7 பேர் உடல் கருகி பலியாகினர்.

குகுடா (Cucuta) நகரில் உள்ள 3 வீடுகளில் திடீரென தீ பற்றி பரவியது. இதில் அந்த வீடுகளில் இருந்த பொருள்களும், 6 கார்களும் தீயில் எரிந்து சேதமடைந்தன.

விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் உள்பட 7 பேர் உடல் கருகி பலியாகினர்.

மேலும் 4 பேர் காயத்துடன் மீட்கப்பட்டு சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர். தீ விபத்துக்கு மின்கசிவு காரணமாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படும் நிலையில், அதுகுறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments