யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்களின் உண்ணாவிரதப்போராட்டம் 2வது நாளாக நீடிப்பு

யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்களின் உண்ணாவிரதப்போராட்டம் 2வது நாளாக நீடிப்பு
யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் நிறுவப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் நினைவு தூண் இடிக்கப்பட்டதை எதிர்த்து, இலங்கையில், யாழ்ப்பாண பல்கலை மாணவர்களின் உண்ணாவிரதப்போராட்டம் இரண்டாவது நாளாக நீடிக்கிறது.
அரசியல் பிரதிநிதிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் பல்கலைகழகம் அமைந்துள்ள இராமநாதன் வீதியில் போராட்டம் நடத்திய நிலையில், கொரோனா பரவல் காரணமாக கைவிடப்படுவதாகவும், சில மாணவர்கள் தொடர்ந்து உண்ணாவிரத போராட்டத்தில், ஈடுபடுவார்கள் என்றும், யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் அறிவித்ததையடுத்து, உண்ணாவிரதப்போராட்டம் தொடர்கிறது.
Comments