இராயபுரம் தொகுதியில் தம்மை எதிர்த்து போட்டியிட தயாரா ? மு.க.ஸ்டாலினுக்கு அமைச்சர் ஜெயக்குமார் கேள்வி

0 4801
இராயபுரம் தொகுதியில் தம்மை எதிர்த்து போட்டியிட தயாரா ? மு.க.ஸ்டாலினுக்கு அமைச்சர் ஜெயக்குமார் கேள்வி

சென்னை - ராயபுரம் சட்டப்பேரவைத் தொகுதியில் தம்மை எதிர்த்து போட்டியிட தயாரா ? என திமுக தலைவர் மு.க. ஸ்டாலினுக்கு, மீன் வளத்துறை அமைச்சர் D.ஜெயக்குமார் கேள்வி எழுப்பியுள்ளார்.

அடையாறு - ஜானகி MGR மகளிர் கலைக்கல்லூரியில், தென் இந்திய பத்திரிகையாளர் யூனியன் சார்பில் நடைபெற்ற பொங்கல் விழாவில் கலந்து கொண்ட பின் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஜெயக்குமார், இராயபுரம் தொகுதியில் மு.க.ஸ்டாலினை நேருக்குநேர் எதிர்த்துப் போட்டியிட தாம் தயார் என்றார்.

முன்னதாக பொங்கல் விழாவில் அமைச்சர், மேடையில் பாட்டு பாடினார்.

விழாவில் பாட்டு பாடியவர்களில் சிறந்த 5 பேரை தேர்ந்தெடுத்து, ஒவ்வொருவருக்கும் தலா ஆயிரம் ரூபாய் பரிசு வழங்கி, அமைச்சர் ஜெயக்குமார் பாராட்டு தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments