குடிபோதையில் லாரியை ஓட்டி வந்த டிரைவர் அதிவேகமாக டிராக்டர் மீது மோதி விபத்து

குடிபோதையில் லாரியை ஓட்டி வந்த டிரைவர் அதிவேகமாக டிராக்டர் மீது மோதி விபத்து
தெலங்கானா மாநிலம் கம்மத்தில் குடிபோதையில் ஓட்டி செல்லப்பட்ட லாரி அதிவேகமாக டிராக்டர் மீது மோதி விபத்தை ஏற்படுத்திய சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.
ஹைதராபாத் -கம்மம் நெடுஞ்சாலையில் இருக்கும் வளைவு ஒன்றில் டிராக்டரை டிரைவர் நேற்றிரவு 10 மணியளவில் திருப்பி கொண்டிருந்தார்.
அப்போது பின்பக்கமாக வந்த லாரி, அதிவேகமாக மோதியது. லாரி மோதியதில், டிராக்டர் பல பாகங்களாக சிதறியது. டிராக்டரில் அமர்ந்திருந்த டிரைவர் தூக்கி வீசப்பட்டார்.
லாரி டிரைவர் குடிபோதையில் வேகமாக ஓட்டி வந்ததே விபத்துக்கு காரணமாக கூறப்படுகிறது.
விபத்தை தொடர்ந்து லாரி டிரைவரை பிடித்து அப்பகுதியில் இருந்தவர்கள் தாக்கினர். தகவலின்பேரில் விரைந்து வந்த போலீசார், டிரைவரை கைது செய்து விசாரனை நடத்தி வருகின்றனர்
Comments