திமுக கூட்டத்தில் நேரடியாக மு.க.ஸ்டாலினிடம் சென்று கோரிக்கை வைத்த மூதாட்டி

0 14314
சென்னை ராயபுரத்தில் திமுக நடத்திய மக்கள்வார்டு சபை கூட்டம் நடைபெற்றது. இதில் திமுக தலைவர் ஸ்டாலின் கலந்து கொண்டு பேசினார். பின்னர் பொதுமக்கள் கேள்வி கேட்கும் நிகழ்ச்சியும் நடைபெற்றது.

சென்னை ராயபுரத்தில் திமுக நடத்திய மக்கள்வார்டு சபை கூட்டம் நடைபெற்றது. இதில் திமுக தலைவர் ஸ்டாலின் கலந்து கொண்டு பேசினார். பின்னர் பொதுமக்கள் கேள்வி கேட்கும் நிகழ்ச்சியும் நடைபெற்றது.

பொதுமக்களில் ஒருவர் பேசிக் கொண்டிருந்தபோது, திடீரென கூட்டத்தின் கடைசி வரிசை அமர்ந்திருந்த மூதாட்டி ஒருவர் ஸ்டாலினை நோக்கி சுமார் 100 மீட்டர் தூரத்திற்கு எழுந்து நடக்க ஆரம்பித்தார். 

அதனை பார்த்து பதறிய திமுக நிர்வாகிகள் அவரை தடுத்து நிறுத்த முயற்சி செய்தனர்.ஆனால் அவர்களை எல்லாம் மீறி, மேடையில் அமர்ந்திருந்த ஸ்டாலினிடம் சென்ற மூதாட்டி சிறிது நேரம் ஏதோ பேசினார். 

பிறகு ஸ்டாலின் இசைவு தெரிவித்ததும் அங்கிருந்து மீண்டும் தன்னுடைய பழைய இடத்தில் வந்து அமர்ந்து கொண்டார். 

இதுகுறித்து அந்த மூதாட்டியிடம் கேட்டபோது, நீண்ட நாட்களாக முதியோர் உதவித் தொகைக்கு எழுதிக்கொடுத்த தனக்கு கிடைக்கவில்லை என்பதால் திமுக தலைவர் ஸ்டாலினிடம் கோரிக்கை விடுத்ததாகவும் அவர் விரைவில் ஆளனுப்பி கோரிக்கையை நிறைவேற்றுவதாக பதில் கூறியதாக தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments