தை பிறந்தால் வழி பிறக்கும், 4 மாதங்களில் ஆட்சி மாற்றம் ஏற்படும்- மு.க.ஸ்டாலின்

தை பிறந்தால் வழி பிறக்கும், 4 மாதங்களில் ஆட்சி மாற்றம் ஏற்படும்- மு.க.ஸ்டாலின்
பொள்ளாச்சி பாலியல் வழக்கை சிபிஐக்கு மாற்றிய பின்னரே அதிமுக மாணவரணி நிர்வாகி கைது செய்யப்பட்டதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
திமுக சார்பில் சென்னை இராயபுரத்தில் மக்கள் வார்டு சபைக் கூட்டம் நடைபெற்றது. இதில், கலந்து கொண்டு உரையாற்றிய மு.க.ஸ்டாலின், தமிழகத்தில் இன்னும் 4 மாதங்களில் ஆட்சி மாற்றம் ஏற்படும் என கூறியுள்ளார்.
தொடர்ந்து பேசிய அவர், இராயபுரம் எம்எல்ஏவான அமைச்சர் ஜெயக்குமார், தனது தொகுதிக்கு எதும் செய்யவில்லை எனக் குற்றஞ்சாட்டினார்.
இதனிடையே, கூட்டத்தின் போது, மூதாட்டி ஒருவர் முதியோர் உதவித் தொகை பெற்றுத் தரவலியுறுத்தி ஸ்டாலினை நோக்கி சென்றதால் அங்கு பரபரப்பு நிலவியது. பின்னர் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்ததால் கூட்டம் விரைவாக முடித்துக் கொள்ளப்பட்டது.
Comments