மாயமான விமானம் ஜாவா கடலில் விழுந்து நொறுங்கியது- இந்தோனேசிய அதிபர் ஜோகோ விடோடோ அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு

0 9133
மாயமான விமானம் ஜாவா கடலில் விழுந்து நொறுங்கியது- இந்தோனேசிய அதிபர் ஜோகோ விடோடோ அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு

நேற்று காணாமல் போன ஸ்ரீவிஜயா ஏர் விமானம் ஜாவா கடலில் விழுந்து நொறுங்கி விட்டதாக இந்தோனேசிய அதிபர் ஜோகோ விடோடோ அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

சனிக்கிழமை பிற்பகல் தலைநகர் ஜகார்த்தோவில் இருந்து 62 பேருடன் பறந்து உயர்ந்த இந்த விமானம் 4 நிமிடங்களில் ரேடார் தொடர்பை இழந்தது.

இந்த நிலையில் ஜாவா கடலில் மீட்புப் பணியில் ஈடுபட்ட வீரர்கள் விமானத்தின் உடைந்த பாகங்களையும், பயணிகளின் உடல்பாகங்களையும் கண்டுபிடித்தனர்.

அதைத் தொடர்ந்து விபத்து குறித்து போக்குவரத்து அமைச்சகம் அளித்த அறிக்கையின் அடிப்படையில் விமானம் நொறுங்கி விழுந்ததை இந்தோனேசிய அதிபர் உறுதி செய்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments