வாட்சாப்பிற்கு போட்டியாக களமிறங்கும் டெலிகிராம்.. டெலிகிராம் பக்கம் சாயும் பயனாளர்கள்

0 1316

ஒரு காலத்தில் ஹீரோவாக பார்க்கப்பட்டு வந்த வாட்சாப் தற்போது வில்லன் போல மாறி வருவதாக சமூக வலைத்தளவாசிகள் குற்றம் சாட்டி வருகின்றனர். தற்போது உள்ள காலகட்டத்தில் டெலிகிராம் பயணாளர்களை விட வாட்ஸாப் பயணாளர்கள் தான் அதிகளவில் இருக்கின்றனர். ஆனால் வாழ்க்கை ஒரு வட்டம் என்பது போல தற்போது அது கொஞ்சம் கொஞ்சம் ஆக மாறிவருகிறது. டெலிகிராமை தற்போது அதிகளவில் மக்கள் பயன்படுத்த தொடங்கி இருக்கின்றனர்.

தற்போது உள்ள காலக்கட்டத்தில் நாம் அனைவரும் இணையதளத்தால் இணைக்கப்பட்டிருக்கிறோம். இதனால் நொடிக்கு நொடி தகவல்களை பரிமாறிகொள்ளும் அளவிற்கு தற்போது வசதிகள் உள்ளன. இந்த டிரெண்டிற்கேற்ப, பல செயலிகள் உருவாக்கப்பட்டுள்ளன. குறிப்பாக வாட்சாப், டெலிகிராம் போன்ற செயலிகள் அதிக அளவில் பயன்பாட்டில் உள்ளன.

வாட்சாப் மற்றும் டெலிகிராம் செயலிகளுக்கிடையே கடும் போட்டி நிலவி வருகிறது.
அண்மையில் வாட்சாப் செயலி பல கட்டுப்பாடுகளை கொண்டுவந்துள்ளது. வாட்சாப் செயலி தன் பயனாளர்களின் தொலைபேசி எண், இருப்பிடம் உள்ளிட்ட சுய விவரங்களை பேஸ்புக்கில் பதிவிடும் வகையில் புதிய அப்டேட்டினை வெளியிட்டுள்ளது. வரும் பிப்ரவரி 8ம் தேதிக்குள் இந்த அப்டேட் செய்யப்படவில்லை என்றால் பயனாளர்கள் செயலிக்குள் நுழைய முடியாது என்றும் கூறப்படுகிறது. வாட்சாப்ப இந்தியாவில் பயண்பாட்டிற்கு வந்த பொழுது, பயனாளர்கள் தகவல்கள் எதுவும் முகநூலிடம் பகிரப்படாது என கூறப்பட்டது குறிப்பிடத்தக்கது.


வாட்சாப்பின் இந்த அப்டேட்டினை குறித்து நிபுணர்கள் பலர் கருத்து தெரிவித்துள்ளனர். இதுபோன்று தகவல்கள் பகிரப்பட்டால், 2016 கேம்பிரிட்ஜ் அனலிடிகா சம்பவம் போன்று பல சம்பவங்கள் நடைபெறலாம் என்று அவர்கள் கூறியுள்ளனர்.

2016 அமெரிக்க தேர்தலின் போது , பிரிட்டனின் கன்சல்டிங் நிறுவனமான கேம்பிரிட்ஜ் அனாலிடிகா, பல்லாயிரக்கணக்கான முகநூல் பயனாளர்களின் தகவல்களை அவர்கள் அனுமதியின்றி எடுத்து அரசியல் விளம்பரம் செய்ய பயன்படுத்தியது. வாட்சாப் மூலம் கொடுக்கப்படும் இந்த தகவல்கள் வணிக நோக்கங்களுக்காக மற்ற நிறுவனங்களிடம் பகிரப்படலாம் என்றும் நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

இந்தியாவின் ,தகவல் தொழில்நுட்ப இடைநிலை வழிகாட்டுதல் விதிகள் 2011, தகவல் தொழில்நுட்பப் பாதுகாப்பு நடைமுறைகள் மற்றும் முக்கிய தனிப்பட்ட தரவு விதிகள் 2011 ஆகியற்றிக்கு இது எதிரானது என்ற கருத்தும் தற்போது நிலவி வருகிறது.
இதனைத்தொடர்ந்து பயனாளர்கள் தற்போது டெலிகிராம் செயலியை பதிவிறக்கம் செய்யத் தொடங்கியுள்ளனர்.

ஆனால் வாட்சாப்போடு ஒப்பிடுகையில், வீடியோ கால் அழைப்பிற்கான வசதி டெலிகிராம் செயலியில் இல்லாமல் இருந்தது. என்னதான் டெலிகிராம் செயலியில் பல வசதிகள் இருந்தாலும், இது ஒரு குறையாகவே பார்க்கப்பட்டது . இந்த நிலையில் தற்பொழுது வீடியோ அழைப்பிற்கான வசதியுடன் களத்தில் இறங்கியுள்ளது டெலிகிராம் செயலி.

அதுமட்டுமின்றி, வாட்சாப்பை ஒப்பிடும்போது டெலிகிராம் செயலியில் சில அம்சங்கள் உண்டு. அதில் ஒன்று, டெலிகிராம் செயலியில், பயனர், பொது சேனல்களையோ அல்லது தனிப்பட்ட சேனல்களையோ உருவாக்கலாம். ஆனால் வாடசாப்பில் அந்த அம்சம் இப்பொழுது கிடையாது . மேலும் , டெலெக்ராம் செயலியில் 2 லட்சம் பேர் கொண்ட குழுவை உருவாக்கலாம். ஆனால் வாட்சாப்பிலோ 300க்கும் குறைவான அளவிலேயே குழுவை அமைக்க முடியும்.

டெலிகிராம் செயலியில் மேலும் ஒரு முக்கிய அம்சமாக,1 .5 ஜி பி வரை கோப்பு, புகைப்படம், வீடியோக்களை பகிரலாம்.

இதைத்தவிர்த்து, டெலிகிராம் செயலி கிளவுட் கம்ப்யூட்டிங் (Cloud computing ) மூலம் செயல்படுகிறது. அதன் அடிப்படையில் இந்த செயலியில் பகிரப்படும் கோப்பு, புகைப்படம், வீடியோக்கள் டெலிகிராம் சர்வரில் சேமிக்கப்படும். இதனால் கைபேசிமட்டுமின்றி வேறு எந்த சாதனத்திலும் நம்மால் பகிரப்பட்ட கோப்பு, புகைப்படம், வீடியோக்களை பார்க்கமுடியும்.

இந்த போட்டியை எதிர்கொள்ள வாட்சாப் புதிய அம்சங்களை கொண்டுவருமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments