சவூதியில் இருப்பது போல பாலியல் குற்றவாளிகளை முச்சந்தியில் தூக்கிலிட வேண்டும்- கங்கனா ரணாவத் வலியுறுத்தல்

0 3197
சவூதியில் இருப்பது போல பாலியல் குற்றவாளிகளை முச்சந்தியில் தூக்கிலிட வேண்டும்- கங்கனா ரணாவத் வலியுறுத்தல்

வூதி அரேபியா நாட்டில் முச்சந்தியில் பாலியல் வன்கொடுமை குற்றவாளிகள் தூக்கிலிடப்படுவதை போல இந்தியாவிலும் தூக்கிலிட வேண்டுமென இந்தி நடிகை கங்கனா ரணாவத் வலியுறுத்தியுள்ளார்.

போபாலில் மத்திய பிரதேச முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுகானை சந்தித்து பேசிய பின்னர் செய்தியாளர்களை சந்தித்த கங்கனா, இந்தியாவில் உள்ள சட்டங்கள் பழமையானவை என்றும், அதன்மூலம் குற்றவாளிகளுக்கு தண்டனை அளிக்க பல ஆண்டுகள் ஆகிறது என்றும் கூறினார்.

பல நேரங்களில் பாதிக்கப்பட்டோரே சட்ட அமைப்பாலும், போலீசாலும் பாதிக்கப்படும் நிலை காணப்படுவதால், இந்தியாவில் பலர் புகார் அளிக்க முன்வருவதில்லை என தெரிவித்த கங்கனா, பெண்களுக்கு எதிரான குற்றத்தில் ஈடுபடுவோருக்கு சவூதி அரேபியா போன்ற நாடுகளில் அளிக்கப்படுவது போல தண்டனை அளிக்கப்பட வேண்டும் என்றார்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments