பாலக்கோட் தாக்குதல் : 300 பேர் பலி என்பது தான் உண்மை... பாகிஸ்தான் முன்னாள் துாதரக அதிகாரி தகவல்!

0 12011

இஸ்லாமாபாத் : பாலக்கோட்டில், இந்திய விமானப்படை நடத்திய தாக்குதலில், 300க்கும்அதிகமானோர் இறந்ததாக, பாகிஸ்தான் தரப்பு, முதல் முறையாக தெரிவித்துள்ளது.

கடந்த 2019ல், ஜம்மு - காஷ்மீரில் உள்ள புல்வாமாவில், பாகிஸ்தான் ஆதரவு பெற்ற, ஜெய்ஷ் - இ - முகமது பயங்கரவாதிகள் நடத்திய தற்கொலைப்படை தாக்குதலில், மத்திய ரிசர்வ் போலீஸ் படையைச் சேர்ந்த, 40 வீரர்கள் பலியாகினர்.

இந்த தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், இந்திய விமானப்படையின் விமானங்கள், பாகிஸ்தானின் பாலக்கோட் பகுதியில் தாக்குதல் நடத்தின. இதில், பலர் இறந்ததாக, இந்திய விமானப்படை தெரிவித்தது. ஆனால் இதனை பாகிஸ்தான் ராணுவமும், அரசும், தொடர்ந்து மறுத்து வந்தன.

இந்த தாக்குதலில் ஒருவர் கூட பலியாகவில்லை. வெறும் மணல் பகுதியில் தான், இந்திய விமானப்படை தாக்குதல் நடத்திச் சென்றது என, தொடர்ந்து கூறி வந்தன. இந்நிலையில், பாகிஸ்தானைச் சேர்ந்த முன்னாள் துாதரக அதிகாரி ஆஹா ஹிலாலே, பாகிஸ்தானின்,'டிவி' சேனல் ஒன்றின் விவாத நிகழ்ச்சியில் பங்கேற்றார். இவர் எப்போதும், பாகிஸ்தான் ராணுவத்தை ஆதரித்து பேசுவது வழக்கம்.

இந்த நிகழ்ச்சியில் பாலகோட்டில், இந்திய விமானப்படை நடத்திய தாக்குதல் பற்றி அவர் கூறுகையில், இந்திய விமானப்படை தாக்குதலில், 300க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டனர். யாரும் பலியாகவில்லை என, அப்போது கூறியது பொய். எல்லையில் நிலைமை மோசமாகி விடக் கூடாது என்பதற்காக அப்படி சொல்லப்பட்டது என்று அவர் கூறினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments