ரஷ்யாவில் பனிச்சரிவில் 10 அடி ஆழத்தில் சிக்கிய 14 வயது சிறுவன் மீட்பு

ரஷ்யாவில் பனிச்சரிவில் 10 அடி ஆழத்தில் சிக்கிய 14 வயது சிறுவன் மீட்பு
ரஷ்யாவில் பனிச்சரிவில் சிக்கிய 14 வயது சிறுவன் அதிர்ஷ்டவசமாக மீட்கப்பட்டான்.
அந்நாட்டின் வடக்குப் பகுதியில் ஆர்ட்டிக் பகுதியை ஒட்டி உள்ள நார்லிஸ்க் என்ற இடத்தில் தற்போது கடும் உறைபனிக்காலம் நிலவி வருகிறது. நேற்று மலைப்பகுதியில் பனிச்சரிவு ஏற்பட்டது.
சுமார் 6 ஆயிரத்து 500 சதுர அடி பரப்பளவில் ஏற்பட்ட பனிச்சரிவில் 10 அடி ஆழத்தில் 14 வயதுடைய பள்ளி மாணவன் சிக்கினான். இதையடுத்து பொதுமக்கள் மற்றும் மீட்புப் படையினர் போராடி அந்தச் சிறுவனை உயிருடன் மீட்டனர்.
மீட்கப்பட்ட சிறுவனின் தந்தையும், சகோதரியும் பனிச்சரிவில் சிக்கி உயிரிழந்து விட்டனர்.
Comments