தோல்வியை ஒப்புக் கொள்ளாத டிரம்ப் ஆதரவாளர்கள் மீண்டும் வன்முறையில் இறங்கலாம்- அரசியல் நோக்கர்கள் எச்சரிக்கை

தோல்வியை ஒப்புக் கொள்ளாத டிரம்ப் ஆதரவாளர்கள் மீண்டும் வன்முறையில் இறங்கலாம்- அரசியல் நோக்கர்கள் எச்சரிக்கை
அமெரிக்க அதிபராக ஜோ பைடன் பதவியேற்கும் போது, டிரம்ப் ஆதரவாளர்கள் மீண்டும் வன்முறையில் இறங்கலாம் என்று அரசியல் நோக்கர்கள் எச்சரித்துள்ளனர்.
அமெரிக்க அதிபர் தேர்தலில் தோல்வியை ஒப்புக் கொள்ள மறுத்த டிரம்ப்பின் ஆதரவாளர்கள் கடந்த சில தினங்களுக்கு முன் நாடாளுமன்றத்தில் புகுந்து வன்முறையில் ஈடுபட்டனர்.
இதில் காவல்துறையைச் சேர்ந்த ஒருவர் உள்பட 5 பேர் உயிரிழந்தனர். இதையடுத்து டிரம்பை பதவி நீக்கம் செய்யவேண்டும் என சபாநாயகர் நான்சி கூறியுள்ளார்.
இந்நிலையில் வரும் 20ம் தேதி புதிய அதிபராக ஜோ பைடன் பதவியேற்கும் போது டிரம்ப் ஆதரவாளர்கள் மீண்டும் வன்முறையில் ஈடுபடக்கூடும் என தகவல் வெளியாகி உள்ளது.
Comments