பாகிஸ்தானில் மின்தடை ஏற்பட்டதால் பல்வேறு முக்கிய நகரங்கள் மின்சாரம் இன்றி இருளில் மூழ்கின

0 1948
பாகிஸ்தானில் மின்தடை ஏற்பட்டதால் பல்வேறு முக்கிய நகரங்கள் மின்சாரம் இன்றி இருளில் மூழ்கின

பாகிஸ்தானில் மின்தடை ஏற்பட்டதால் கராச்சி, லாகூர், இஸ்லாமாபாத், முல்தன், கசூர் உள்பட பல முக்கிய நகரங்கள் இருளில் மூழ்கின.

சனிக்கிழமை நள்ளிரவு முதல் எங்கும் மின்சாரம் இல்லாத நிலை பரவலாகக் காணப்பட்டது. தேசிய மின்விநியோகத்திற்கு பொறுப்புவகிக்கும் NTDC யில் ஏற்பட்ட மின்பழுதே இதற்குக் காரணம் என்று கூறப்படுகிறது.

விரைவில் நிலைமை சரிசெய்யப்பட்டு விடும் என்று இஸ்லாமாபாத் துணை ஆணையர் ஹம்சா ஷஃப்காத் டிவிட்டர் மூலம் தெரிவித்துள்ளார்.

மின்துறை அமைச்சர் ஓமர் அயூப் தமது மொத்த துறைசார்ந்த அதிகாரிகளுடன் மின்சாரத்தை சீரமைக்க நடவடிக்கை எடுத்துவருவதாகவும் தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments