விவசாயிகளின் போராட்டம் 46வது நாளாக நீடிப்பு..!

விவசாயிகளின் போராட்டம் 46வது நாளாக நீடிப்பு..!
டெல்லியின் நுழைவாயிலான சிங்கூ பகுதியில் விவசாயிகளின் போராட்டம் இன்று 46வது நாளை எட்டியுள்ளது.
விவசாயிகள் மத்திய அரசுடன் நடத்திய எட்டு சுற்றுப் பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகும் மூன்று வேளாண் சட்டங்களை திரும்பப்பெற முடியாது என்று மத்திய அரசு திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.
இதனால் விவசாயிகள் தங்கள் போராட்டத்தைத் தொடர்வதாக அறிவித்துள்ளனர். விவசாயிகளுக்கு ஊக்கம் அளிக்க பஞ்சாபில் இருந்து வந்த பிரபல இசைப்பாடகர்கள் பஞ்சாபி திரைப்படப் பாடல்களைப் பாடி மகிழ்வித்தனர்.
இதனிடையே போராட்டம் என்ற பெயரில் விவசாயிகள் பிரியாணி தின்றுக் கொண்டும் கொரோனாவையும் பறவைக்காய்ச்சலையும் பரப்பிக் கொண்டும் இருப்பதாக ராஜஸ்தான் பாஜக எம்.எல்.ஏ மதன் திலாவர் விமர்சித்துள்ளார்.
Comments