சட்டவிரோத நில விற்பனை தொடர்பான வழக்கில் நேரில் ஆஜராகுமாறு ஜெகன்மோகன்ரெட்டிக்கு அமலாக்கத்துறை நீதிமன்றம் சம்மன்

0 1629
சட்டவிரோத நில விற்பனை தொடர்பான வழக்கில் நேரில் ஆஜராகுமாறு ஜெகன்மோகன்ரெட்டிக்கு அமலாக்கத்துறை நீதிமன்றம் சம்மன்

ட்டவிரோத நில விற்பனை தொடர்பான வழக்கு விசாரணைக்கு நேரில் ஆஜராகுமாறு ஆந்திர முதலமைச்சர் ஜெகன்மோகன்ரெட்டிக்கு அமலாக்கத் துறை நீதிமன்றம் சம்மன் அனுப்பியுள்ளது.

ஜெகன் மீதான சொத்துக்குவிப்பு வழக்கில், ஆந்திராவில் உள்ள மருந்து நிறுவனம் ஒன்றுக்கு, கடந்த, 2004 - 09ம் ஆண்டில், மிக குறைந்த விலையில், 75 ஏக்கர் அரசு நிலம் விற்கப்பட்டுள்ள புகாரும் அடங்கும்.

இந்த வழக்கு தொடர்பாக, நம்பள்ளி மாவட்ட நீதிமன்றத்தில் ஜெகன்மோகன் ரெட்டி, அவரது கட்சியைச் சேர்ந்த எம்.பி., விஜய சாய் உட்பட ஆறு பேர் மீது, அமலாக்கத்துறை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது.

இந்த வழக்கு தொடர்பாக, வரும், 11ந்தேதிக்குள் நேரில் ஆஜராக ஜெகன்மோகன் ரெட்டி, விஜய் சாய் ரெட்டி உட்பட 6பேருக்கு, அமலாக்கத் துறை நீதிமன்றம் சம்மன் அனுப்பியுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments