மெக்சிகோ அடுக்கு மாடி கட்டிடத்தில் நடந்த பயங்கர தீ விபத்தில் ஒருவர் பலி

0 467
மெக்சிகோ அடுக்கு மாடி கட்டிடத்தில் நடந்த பயங்கர தீ விபத்தில் ஒருவர் பலி

மெக்சிகோ நாட்டில் சுரங்கப்பாதை தலைமையகத்தில் நடைபெற்ற தீ விபத்தில் ஒருவர் உயிரிழந்தார்.

பலர் படுகாயம் அடைந்தனர். அங்குள்ள அடுக்கு மாடி கட்டிடம் ஒன்றில் திடீரென தீவிபத்து ஏற்பட்டு கரும்புகை அதிகளவில் வெளியானது. இதுபற்றி தகவல் அறிந்த தீயணைப்பு மற்றும் மீட்பு படை வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.

இந்த தீ விபத்தில் புகையில் சிக்கி ஒருவர் உயிரிழந்தார் என்றும் 30க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. மின்கசிவே இந்த விபத்துக்கு காரணம் என விசாரணையில் தெரிய வந்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments