வலுவான நிலையில் ஆஸ்திரேலிய அணி..!

0 2754
வலுவான நிலையில் ஆஸ்திரேலிய அணி..!

ஸ்திரேலியாவின் சிட்னி நகரில் நடைபெற்று வரும் 3வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலியா அணி 2வது இன்னிங்சில் உணவு இடைவேளை வரை 4 விக்கெட் இழப்பிற்கு 182 ரன்கள் எடுத்துள்ளது.

சிட்னியில் இந்தியா-ஆஸ்திரேலிய அணிகள் இடையே 3வது கிரிக்கெட் டெஸ்ட் போட்டி நடந்து வருகிறது. முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலியா 338 ரன்னும் இந்திய அணி 244 ரன்னும் எடுத்தது.

இதனை அடுத்து 94 ரன்கள் முன்னிலை பெற்ற ஆஸ்திரேலியா தனது 2வது இன்னிங்சை ஆடத் தொடங்கியது. 4ஆம் நாளான இன்று ஆஸ்திரேலியா அணி இந்திய பந்து வீச்சாளர்களின் பந்து வீச்சை எவ்வித சிரமும் இன்றி எதிர்கொண்டு ரன்களை வேகமாக குவித்து வருகிறது.

அந்த அணி 4 விக்கெட் இழப்பிற்கு 182 ரன்களை எடுத்துள்ளது. லபுஸ்சேன் 73 ரன்களும், மாத்யூ வடே 4 ரன்களும் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தனர். ஸ்டீவன் ஸ்மித் 58 ரன்களுடனும் காமரூன் கிரீன் 20 ரன்களுடனும் விளையாடி வருகின்றனர்.

இந்திய தரப்பில் சைனி 2 விக்கெட்டுகளும், அஸ்வின், சிராஜ் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றி உள்ளனர்

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments