போகியன்று கடும் புகை மூட்டத்தை உண்டாக்கி விமான சேவைகளுக்கு பாதிப்பு ஏற்படுத்த வேண்டாம்- இந்திய விமான நிலைய ஆணையம் வேண்டுகோள்

0 1109
போகியன்று கடும் புகை மூட்டத்தை உண்டாக்கி விமான சேவைகளுக்கு பாதிப்பு ஏற்படுத்த வேண்டாம்- இந்திய விமான நிலைய ஆணையம் வேண்டுகோள்

போகியன்று கடும் புகை மூட்டத்தை உண்டாக்கி விமான சேவைகளுக்கு பாதிப்பு ஏற்படுத்தி விட வேண்டாம் என இந்திய விமான நிலைய ஆணையம் வலியுறுத்தியுள்ளது.

இதுதொடர்பாக வெளியிடப்பட்ட அறிக்கையில், சென்னை விமான நிலையத்தை சுற்றியுள்ள பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களிடம் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கேட்டுக் கொள்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

புகைமூட்டம் ஏற்படுவதால் கண்பார்வை பாதிக்கப்பட்டு விமானங்களை ரத்து செய்ய வேண்டிய, திருப்பிவிட வேண்டிய நிலை ஏற்படுவதாலும், பயணிகள் சிரமத்திற்கு உட்படுவதாலும், இந்தக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments