நாடு முழுக்க 16 ஆம் தேதி தொடங்குகிறது கொரோனா தடுப்பூசி போடும் பணி...

0 1452
நாடு முழுக்க 16 ஆம் தேதி தொடங்குகிறது கொரோனா தடுப்பூசி போடும் பணி..

பிரதமர் மோடி அனைத்து மாநில முதலமைச்சர்களுடன் காணொலி வாயிலாக நாளை ஆலோசனை நடத்த இருக்கிறார். மேலும் வரும் 16ம் தேதி கர்நாடக மாநிலத்தின் இரண்டு இடங்களில் காணொலி வாயிலாக தடுப்பூசி போடும் பணியை பிரதமர் தொடங்கி வைக்கிறார்.

கோவிஷீல்ட் மற்றும் கோவாக்சின் என்ற இரு தடுப்பூசிகளுக்கும், மத்திய அரசு சமீபத்தில் அவசரகாலத்தில் பயன்படுத்தி கொள்ள அனுமதியளித்தது. இந்த இரண்டு தடுப்பூசிகளையும், அனைத்து மாநிலங்களுக்கும் அனுப்பி வைப்பதற்கான ஏற்பாடுகளை, மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் செய்து வருகிறது.

நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசியை செலுத்தும் பணிகளுக்கு மூன்று லட்சத்திற்கும் அதிகமான மருத்துவப் பணியாளர்களுக்கு பயிற்சி வழங்கப்பட்டுவருகிறது. மனித நேயத்துடன் உயிர்காக்கும் பணியில் இந்தியா ஈடுபட்டுள்ளதாக இந்தப் பணிகளுக்கு பிரதமர் மோடி புகழாரம் சூட்டியுள்ளார்.

வரும் 16ம் தேதி இத்திட்டம் நாடு முழுவதும் தொடங்க உள்ள நிலையில் கர்நாடக மாநிலம் ஹூபளி மற்றும் பெங்களூரில் இத்திட்டத்தை பிரதமர் மோடி காணொலி வாயிலாக தொடங்கி வைக்க உள்ளார். நாடு முழுவதும் உள்ள 5 ஆயிரம் மையங்களில் தடுப்பூசி போடும் பணிகளை மோடி நேரடியாக கண்காணிக்கப் போவதாகவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

மருத்துவர்கள் மற்றும் சுகாதாரப் பணியாளர்களுக்கு முதல்கட்டமாக ஒருகோடி தடுப்பூசிகளும் காவல்துறையினர் ராணுவம் , மருத்துவப் பணியாளர்கள் உள்ளிட்ட முன்களப் பணியாளர்கள் இரண்டு கோடி பேருக்கும் தடுப்பூசி போடப்பட உள்ளது.

இதனிடையே அனைத்து மாநில முதலமைச்சர்களுடனும் பிரதமர் மோடி நாளை காணொலி வாயிலாக ஆலோசனை நடத்துகிறார். தடுப்பூசி விநியோகம் , சேமிப்பு , பயன்பாடு மற்றும் எத்தகைய நபர்களுக்கு முன்னுரிமையளிப்பது போன்ற திட்டங்கள் குறித்து மாநில அரசுகளின் ஒத்துழைப்பை மோடி கோருவார் என்று கூறப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments