டிஜிட்டல் அசூரனா சீனா? அமெரிக்க புகாரால் அதிர்ச்சி.!

0 6075
ஆழ்கடலுக்குள் பதிக்கப்பட்டுள்ள தொலைத்தொடர்பு கேபிள்களை புதிய ஆயுதமாகப் பயன்படுத்தி, உலகளாவிய, இண்டர்நெட், தகவல்தொடர்பு உள்ளிட்ட சைபர் தொழில்நுட்பங்களை, தனது கட்டுப்பாட்டில் கொண்டுவர சீனா முயற்சிப்பதாக, அமெரிக்கா குற்றம்சாட்டியிருக்கிறது.

ஆழ்கடலுக்குள் பதிக்கப்பட்டுள்ள தொலைத்தொடர்பு கேபிள்களை புதிய ஆயுதமாகப் பயன்படுத்தி, உலகளாவிய, இண்டர்நெட், தகவல்தொடர்பு உள்ளிட்ட சைபர் தொழில்நுட்பங்களை, தனது கட்டுப்பாட்டில் கொண்டுவர சீனா முயற்சிப்பதாக, அமெரிக்கா குற்றம்சாட்டியிருக்கிறது. 

சீனாவின் பிரபல தகவல் தொடர்பு மற்றும் டெலிகாம் உற்பத்தி பொருள் நிறுவனம் ஹூவாய். இந்நிறுவனம், மீது, 2019ஆம் ஆண்டு பின்னிறுதியில், தகவல் திருட்டு குற்றச்சாட்டை, அமெரிக்கா சுமத்தியது. சீனாவின் கம்யூனிஸ்ட் அரசு, மற்ற நாடுகளை உளவு பார்க்கவும், தேசப் பாதுகாப்பு தகவல்களை திரட்டவும், உதவிட, ஹூவாய் தகவல் திருட்டில் ஈடுபடுவதாக, குற்றம்சாட்டப்பட்டது.

டெலிகாம் சேவை மற்றும் டிஜிட்டல் பொருட்கள் உற்பத்தியில் முன்னணி வகிக்கும் சீன நிறுவனமான ZTE உள்ளிட்ட நிறுவனங்கள் மீது அமெரிக்கா குற்றம்சாட்டியுள்ளது. உலக சைபர் பாதுகாப்பு நுட்பங்களை கட்டுப்படுத்தி, ஏதேச்சதிகாரமாக செயல்பட ஹூவாய், ZTE உள்ளிட்ட தனது நிறுவனங்கள் மூலம் சீனா முனைவதாகவும், அமெரிக்கா பகீர் புகாரை தொடுத்துள்ளது.

அதிஉயர் இணைய இணைப்பை சாத்தியமாக்கும், 5ஜி சேவையை வழங்குவதிலும், அமெரிக்கா மற்றும் சீன நிறுவனங்கள் இடையே கடும் போட்டி நிலவும் நிலையில், இந்த குற்றச்சாட்டு வீசப்பட்டிருக்கிறது.

சீனாவின் ZTE 5ஜி சேவையை வழங்க, பெரும் முஸ்தீபுகளில் ஈடுபட்டிருக்கிறது. இந்நிலையில், ஹூவாய்யை தொடர்ந்து, அமெரிக்காவின் குற்றச்சாட்டு ZTE நிறுவனம் ஆளாகியிருக்கிறது.

இந்த ஒரு நிறுவனம் மட்டுமின்றி, இதுபோன்ற, சீன தகவல் தொடர்பு நிறுவனங்களால், ஒவ்வொரு நாட்டின், சைபர் பாதுகாப்புக்கும் குந்தகம் ஏற்பட வாய்ப்பிருப்பதாகவும் அமெரிக்கா எச்சரித்திருக்கிறது.

இந்தியப்பெருங்கடல், அட்லாண்டிக், பசிபிக் உள்ளிட்ட ஆழ்கடல் பிராந்தியங்களில், அதிவிரைவு தொலைத்தொடர்பு வசதியை ஏற்படுத்தித்தர வல்ல, 380 ஆழ்கடல் கேபிள் திட்டங்களில், சீனாவின் ஹூவாய், ZTE உள்ளிட்ட நிறுவனங்கள் ஈடுபட்டுள்ளன. இந்த ஆழ்கடல் கேபிள்கள் மூலம், உலகில் 95 சதவிகித தகவல் தொடர்பு டேட்டாக்கள் பகிரப்படுவதாக சொல்லப்படுகிறது. 

இதனைத் தொடர்ந்து, ஹூவாய் நிறுவன ஆழ்கடல் கேபிள் திட்டங்களிலிருந்து அமெரிக்கா தன்னை விடுவித்துக் கொண்டிருப்பதோடு, உடனடியாக வெளியேற ஆணை பிறப்பித்திருப்பதாகச் சொல்லப்படுகிறது.

இதற்கிடையே, சீனாவின் ஆழ்கடல் கேபிள் திட்டங்களுக்கு எதிராக, அந்நாட்டின் பரம வைரியான ஜப்பான் களமிறங்கியிருக்கிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments