வீரத்தை நிரூபிக்கும் இளவட்டக்கல்... இன்று விளையாட்டாய்

0 2801

நெல்லை அருகே பொங்கல் பண்டிகைக்கான ஏற்பாடுகள் களைகட்டிவருகிறது.

பண்டிகை என்றாலே கொண்டாட்டம் தான். அதிலும் தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகைக்கு பல்வேறு சிறப்புக்கள் உள்ளன.

நகர் புறங்களை பொறுத்தவரையில் பொங்கல் பண்டிகை அன்று மட்டுமே சூரியனுக்கு படையலிட்டு பொங்கல் செய்து வழிபடுவார்கள். ஆனால் தமிழக கிராமங்களில் பொங்கல் பண்டிகைக்கு ஒரு வாரத்திற்கு முன்பே களைகட்டிவிடும். குறிப்பாக பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நடைப்பெறும் விளையாட்டு போட்டிகளில் பொதுமக்கள் அனைவரும் வயது வித்தியாசமின்றி ஆர்வமுடன் பங்கு கொள்வார்கள்.

சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவருக்கும் விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்படும். சிறுவர்களுக்கு ஓட்டப்பந்தயம், கயிறு இழுக்கும் போட்டி . இளைஞர்களுக்கு இளவட்டக் கல் தூக்கும் போட்டி என வயதுக்கேற்ப போட்டிகள் நடத்தப்படும். இதில் இளவட்ட கல் என்பது கூடுதல் சிறப்பு வாய்ந்தது.

இளவட்டக்கல் என்பது ஒரு கல் தூக்கும் போட்டி. பண்டையக்கால தமிழர்கள் சிலர் தங்கள் பெண்ணிற்கு ஏற்ற துணையை தேர்ந்தெடுக்க இளவட்டக்கல் தூக்கும் போட்டியை நடத்துவர். போட்டி அறிவிக்கப்பட்ட பின் , அந்த பெண்ணை மணக்க விருப்பமுள்ள இளைஞர்கள் அனைவரும் அந்த போட்டியில் பங்கு பெறுவார்கள். கடைசியில் போட்டியில் வெற்றி பெறும் ஆணிற்கு அந்த பெண் மணமுடிக்கப் படுவாள்.

ஆண்கள் தங்களின் வீரத்தை வெளிப்படுத்தி பெண்ணை மணமுடிக்கும் நிக்ழ்வாகவே முந்தைய காலங்களில் இது இருந்து வந்தது. ஆனால் தற்பொழுது பண்டிகை காலங்களில் இது ஒரு விளையாட்டு போட்டியாக நடத்தப்படுகிறது. அப்படி பொங்கலுக்கு இன்னும் ஒரு வாரகாலமே உள்ள நிலையில் பல கிராமங்களில் இளவட்டக்கல் போட்டிக்கான ஏற்பாடுகள் நடைப்பெற்று வருகின்றன.

அந்த வகையில், நெல்லை மாவட்டம் பணகுடி அருகே உள்ள வடலிவிளை கிராமத்தில் பொங்கல் போட்டிக்கான பயிற்சி நடைப்பெற்று வருகிறது. இதில் ஆண்களும் ,பெண்களும் பாலின வேறுபாடு இன்றி கலந்து கொண்டனர்.

கொரோனா ஊரடங்கால் வாழ்க்கை கலையற்று இருக்கும் இந்த நிலையில், ”தை பிறந்தால் நிச்சயம் வழி பிறக்கும்” என்ற நம்பிக்கையுடன் மக்கள் காத்திருக்கின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments