32 மாவட்டங்களில் கொரோனாவுக்கு ஒரு உயிரிழப்பு கூட நிகழவில்லை

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து, கடந்த 24 மணி நேரத்தில் 761 பேருக்கு புதிதாக வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
ஒரே நாளில் 882 பேர் நலம் அடைந்து, வீடு திரும்பி உள்ளனர். தமிழகம் முழுவதும் கொரோனவுக்கு 7 பேர் உயிரிழந்தனர், 32 மாவட்டங்களில் கொரோனாவுக்கு ஒரு உயிரிழப்பு கூட நிகழவில்லை.
கொரோனா இல்லாத மாவட்டமாக பெரம்பலூர் நீடித்து வரும் நிலையில், புதிதாக இப்பட்டியலில் ராமநாதபுரம் இணைந்துள்ளதாக சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
Comments