தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு கனமழை பெய்யக்கூடும்-வானிலை ஆய்வு மையம்

0 52720
தமிழகத்தில் அடுத்து 5 நாட்களுக்கு கனமழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு கனமழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

இதுகுறித்து அந்த மையம் விடுத்துள்ள செய்தி குறிப்பில், இலங்கையை ஒட்டி நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, அடுத்த 24 மணி நேரத்தில், தூத்துக்குடி, கன்னியாகுமரி உள்ளிட்ட 9 மாவட்டங்களில் கனமழை பெய்யகூடும் என்றும், மதுரை, நெல்லை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழையும், ஏனைய மாவட்டங்களில் லேசான மழையும் பெய்யக்கூடுமென கூறப்பட்டுள்ளது.

10 ஆம் தேதி அன்று ராமநாதபுரம்,சிவகங்கை உள்ளிட்ட 5 மாவட்டங்களின் ஓரிரு இடங்களில் மிக கனமழையும், தஞ்சை, திருவாரூர் உள்ளிட்ட 6 மாவட்டங்களில் கனமழையும், ஏனைய மாவட்டங்களில் மிதமான மழையும் பெய்யக்கூடுமென குறிப்பிடப்பட்டுள்ளது. 11 ஆம் தேதி அன்று ராமநாதபுரம், தூத்துக்குடி மாவட்டங்களின் ஓரிரு இடங்களில் மிக கனமழையும், சிவகங்கை,மதுரை உள்ளிட்ட 9 மாவட்டங்களில் கனமழையும்,ஏனைய மாவட்டங்களில் மிதமான மழையும் பெய்யக்கூடுமென கூறப்பட்டுள்ளது.

12 ஆம் தேதி அன்று நெல்லை,தென்காசி, தூத்துக்குடி, குமரி மாவட்டங்களின் ஓரிரு இடங்களில் கனமழையும், ஏனைய தென் மாவட்டங்களில் மிதமான மழையும் பெய்யக்கூடும் என்றும் 13 ஆம் தேதி அன்று தென் மாவட்டங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

சென்னை நகரில் அடுத்த இரு நாட்களுக்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், நகரின் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தென்மேற்கு வங்க கடல், குமரிக்கடலில் மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் சூறாவளி காற்று வீசுவதால் அடுத்த இரு நாட்களுக்கு மீனவர்கள் அங்கு செல்ல வேண்டாமென எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments