உலகை காப்பாற்ற இந்தியா தயார்... பிரதமர் மோடி

0 6680
இரண்டு கொரோனா தடுப்பூசிகளால் மனிதகுலத்தை காப்பாற்ற இந்தியா தயாராக உள்ளதாக பிரதமர் மோடி கூறியுள்ளார்.

இரண்டு கொரோனா தடுப்பூசிகளால் மனிதகுலத்தை காப்பாற்ற இந்தியா தயாராக உள்ளதாக  பிரதமர் மோடி கூறியுள்ளார். 

16-வது வெளிநாடு வாழ் இந்தியர்கள் மாநாட்டை பிரதமர் மோடி காணொளி வாயிலாக தொடங்கி வைத்தார். அப்போது பேசிய அவர், நாம் உலகின் பல்வேறு மூலைகளிலிருந்தும் இணையம் வாயிலாக இணைந்துள்ள நிலையில், மனம் எப்போதும் பாரத மாதாவுடன் இணைக்கப்பட்டுள்ளது என்றார்.

பிபிஇ கருவிகள், முக கவசங்கள், வென்டிலேட்டர்கள் மற்றும் சோதனைக் கருவிகளை இந்தியா வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்த நிலை மாறி உள்ளது என்றும், இப்போது இந்தியா இவற்றின் தயாரிப்பில் தன்னிறைவு அடைந்துள்ளது என்றும் அவர் கூறினார். இன்று உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட இரண்டு கொரோனா தடுப்பூசிகளால் மனிதகுலத்தை காப்பாற்ற இந்தியா தயாராக உள்ளதாக அவர் தெரிவித்தார்.

இந்தியா பயங்கரவாதத்தை எதிர்கொண்டபோது, உலகமும் இந்த சவாலை எதிர்கொள்ள தைரியம் பெற்றதாக அவர் குறிப்பிட்டார். இன்று, ஊழலை முடிவுக்கு கொண்டுவர இந்தியா தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதாக கூறிய அவர், திட்டப் பயனாளிகளுக்கு அவர்களின் வங்கிக் கணக்கில் பணம் வரவு வைக்கப்படுகிறது என்றார்.

ஏழைகளை முன்னேற்ற இந்திய அரசு மேற்கொள்ளும் நடவடிக்கைகள் உலகம் முழுவதும் விவாதிக்கப்படுவதாகவும், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறையில், வளரும் நாடு கூட முன்னிலை வகிக்க முடியும் என்பதை இந்தியா காட்டியுள்ளது என்றும் அவர் கூறினார். இந்தியா உடைந்து விடும் என்றும், ஜனநாயகம் நாட்டில் சாத்தியமற்றது என்றும் சிலர் கேலி செய்த தாக கூறிய பிரதமர். ஆனால் இந்தியா இன்று ஒரு வலுவான மற்றும் துடிப்பான ஜனநாயக நாடாக திகழ்கிறது என்றார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments